சிங்கப்பூரில் மூன்று இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகளை வேட்பாளர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
நேற்று 9 பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றன. இன்று 3 கூட்டங்கள் நடைபெற உள்ளது.
மக்கள் செயல் கட்சியானது 2 கூட்டங்களை நடத்துகிறது.
ஒரு கூட்டம் ஜாலான் காயு எஸ்டேட்டில் உள்ள ஃபெர்ன் கிரீன் தொடக்கப்பள்ளியிலும், ஒரு கூட்டம் பயனியர் எஸ்டேட்டில் உள்ள ஜூரோங் வெஸ்ட் ஸ்டேடியத்திலும் நடைபெறும்.
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி செம்பவாங் தொகுதியில் உள்ள சன் பிளாஸா அருகில் ஒரு கூட்டத்தை நடத்துகிறது.
இந்தக்கூட்டம் மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும்.
மக்கள் செயல் கட்சியும் பாட்டாளிக் கட்சியும் ஜாலான் காயுவில் போட்டியிடுகின்றன.
மக்கள் செயல் கட்சியும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியும் மீண்டும் பயனியரில் போட்டியிடுகின்றன.
செம்பவாங் தொகுதியில் மக்கள் செயல் கட்சி, சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி மற்றும் தேசிய ஒற்றுமை பாட்டுக் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.