SMU ஆய்வில் வெளிவந்த உண்மை...!! மோசமாகும் காபி கடைகளின் கழிவறை சுகாதாரம்...!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தீவு முழுவதும் உள்ள காபி கடைகளின் கழிவறைச் சுகாதாரமானது மிகவும் மோசமாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சற்று மோசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளிவந்துள்ளது.
1000க்கும் மேற்பட்ட காபி கடைகள் மற்றும் 100 உணவகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டது.
பெரும்பாலான கடைகளில் எண்ணெய் படிந்த தரைகள்,மங்கலான விளக்குகள்,கை கழுவும் தொட்டிகளில் அடைப்பு போன்றவை இருந்ததாகக் கூறியது.
தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் உணவக கழிப்பறைகளை மாதந்தோறும் திடீர் ஆய்வுகளை நடத்துகிறது.
சிங்கப்பூர் உணவு ஆணையமும் அவ்வப்போது காபி கடைகளின் கழிவறைகளைச் சோதனை செய்கிறது.
குப்பை தொட்டிகள் நிரம்பி இருந்தாலோ, கழிப்பறைகளில் உள்ள மின்சாதனங்கள் உடைந்திருந்தாலோ,கதவுகளின் தாழ்ப்பாள் சேதமடைந்திருந்தாலோ நிர்வாகம் சரி செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்யத் தவறினால் நிர்வாகத்திற்கு 5,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும்.
இந்த கண்டுபிடிப்புகள் பொது கழிப்பறை சுகாதாரத்தின் நிலையை மேம்படுத்துவதற்கும், உணவு கையாளுபவர்களின் தூய்மையின் அளவை உயர்த்துவதற்கும் தீர்க்கமான மற்றும் கூட்டு நடவடிக்கையை ஊக்குவிக்கும் என்று கூறப்படுகிறது.
