சிங்கப்பூர் : வேலையிட விபத்துகளை தடுக்க ஓர் புதிய முயற்சி!!

சிங்கப்பூர் : வேலையிட விபத்துகளை தடுக்க ஓர் புதிய முயற்சி!!

சிங்கப்பூரில் சலிப்பூட்டும், அருவருக்கத்தக்க மற்றும் ஆபத்தான வேலைகளை செய்வதற்காக இயந்திர மனித கருவிகள் உருவாக்கப்படுகின்றன.

சிங்கப்பூர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம் அந்த முயற்சிகளை மேற்கொள்கிறது.

உயரமான இடங்களில் வேலை செய்யும் போது ஆபத்து நேரிடலாம்.

அவ்வாறு உயரமான இடங்களில் மனிதர்களுக்கு பதிலாக இயந்திர மனித கருவிகள் வேலை செய்ய முடியும்.

ஆபத்தான ரசாயனம் உள்ள இடங்களில் இந்த வகையான கருவிகளை பயன்படுத்துவதற்கு திட்டமிடப்படுகிறது.

மூன்று மீட்டர் உயரம் வரை சென்று கண்ணாடிகளில் விரிசல்கள் உள்ளதா எனப் பரிசோதிக்க முடியும்.

அது மட்டுமல்லாமல் இந்த கருவியின் கை கேமராவாக மாறி பழுது இருந்தால் அவைகளை படம் பிடிக்கும்.

வேலை இடங்களில் ஏற்படும் விபத்துகளை தடுக்க எடுக்கப்படும் முயற்சியில் இதுவும் ஒன்றாகும்.