விமானத்தில் குடிப்போதையில் மோசமாக நடந்து கொண்ட இந்திய நபர்!! சாங்கி விமான நிலையத்தில் கைது!!
விமானத்தில் குடிபோதையில் இருந்தது மற்றும் விமான பணியாளரை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக 42 வயதுடைய இந்திய நபர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.
பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி மாலை 6.55 மணிக்கு இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
அந்த நபரின் செயல் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
குடிபோதையில் இருந்ததாக நம்பப்படும் அந்த நபர் தமது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த பயணியை இழுத்து முன்னால் இருந்த இருக்கையில் வலுக்கட்டாயமாக தள்ளியதாகவும்,மற்ற பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்தது.