முன்னாள் CSK வீரர் கூறிய கருத்து!! விமர்சிக்கும் CSK ரசிகர்கள்!!

முன்னாள் CSK வீரர் கூறிய கருத்து!! விமர்சிக்கும் CSK ரசிகர்கள்!!

2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அங்கே இடம்பெற்றிருக்கும் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தீபக் சஹார் நேற்று ஒரு கருத்தை கூறினார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியின் முடிவில் அவர் ஒளிபரப்பு நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார்.

அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையிலான வித்தியாசம் பற்றி கூறும் படி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரே ஒரு தலைவர் மட்டும்தான்.ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் பல தலைவர்கள் இருக்கிறார்கள் என்று கூறிய பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி தான் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார்.

ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா,மூத்த வீரர்களான சூரியகுமார் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் அணியை வழிநடத்துகிறார்கள் என்பதைத்தான் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதனை அடுத்து சிஎஸ்கே ரசிகர்கள் தீபக் சஹார் சொன்னது சரியா என்பதை விமர்சித்து வருகின்றனர்.

இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருத்ராஜ் கெய்க்வாட் இருக்கிறார்.

தோனி அவருக்கு உதவினாலும் பல முடிவுகள் ருத்ராஜ் அவர்கள் தான் எடுக்கிறார்.

எனவே தீபக் சஹார் கூறுவதில் ருத்ராஜூக்கு வேலை இல்லை என்பது போன்ற அர்த்தம் வருவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

இரண்டு அணிகளுமே ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்று நினைப்பில் தான் இருக்கிறது.

நான் சிஎஸ்கே உடன் இருக்கும்போது பயிற்சி நிர்வாகம் என்னை ஐபிஎல் இறுதிப் போட்டியில் இறுதி ஓவரின் பந்து வீசுவதைப் போல பயிற்சி செய்யுமாறு கூறுவார்கள்.

அதேபோல பேட்ஸ்மேன்களும் இறுதிப் போட்டியின் இறுதி ஓவரில் பேட்டிங் செய்வதை போல பயிற்சி செய்ய வேண்டும் என்று கூறுவார்கள்.

எங்களுடைய ஒரே குறிக்கோள் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதாகத்தான் இருக்கும் என்று தீபக்சஹார் கூறினார்.