ஒரே போன் காலால் நின்று போன திருமணம்..!! முன்னாள் காதலி செய்த தரமான சம்பவம்…!!

ஒரே போன் காலால் நின்று போன திருமணம்..!! முன்னாள் காதலி செய்த தரமான சம்பவம்...!!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் திருமண விழா நடந்து கொண்டிருந்தபோது மணமகன் திடீரென தனது திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அவரது முன்னாள் காதலி அவரது மொபைல் போனில் அழைத்ததாகக் கூறப்பட்டது. அவர் உடனடியாக திருமணத்தை நிறுத்துவதாக கூறி அங்கிருந்து வெளியேறினார்.

அவரது இந்த முடிவு மணமகளுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார்கள் போலீசில் புகார் அளித்தனர். இரு குடும்பத்தினரும் பஞ்சாயத்தை அணுகினர்.

மணமகளின் குடும்பத்திற்கு இழப்பீடாக 50 லட்சம் ரூபாய் (S$76,000) வழங்கப்படலாம்.

இந்தியாவில் பல திருமண மோசடிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில், பெங்களூருவில் வசிக்கும் ஒரு பெண்ணை வெளிநாட்டில் வசிக்கும் மணமகன் என்று நம்பி ஏமாற்றி, சுமார் 5.5 லட்சம் ரூபாய் (S$8,500) பணத்தை பறித்துச் சென்றார்.