ரிவர்வேலி தீச்சம்பவத்தில் உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த நிகழ்ச்சி..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ரிவர் வேலி கடைவீதியில் ஏற்பட்ட தீ விபத்தில், வெளிநாட்டு தொழிலாளர்களின் விரைவான நடவடிக்கையால் பலர் உயிர் தப்பினர்.
ஏப்ரல் 8 ஆம் தேதி நடைபெற்ற இச் சம்பவத்தில் பத்து வயது சிறுமி ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிர் தப்பினர்.
ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 20) பிற்பகல் ‘ItsTrainingRaincoats’ தொண்டு நிறுவனத்தால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சி ஹென்டர்சன் சாலையில் உள்ள ஒரு கடையில் நடைபெற்றது.
குழந்தைகளை காப்பாற்றிய 15 வெளிநாட்டு தொழிலாளர்களின் பணியைப் பாராட்டி, பெற்றோர்கள் நேரில் தங்களது நன்றியைத் தெரிவித்து கொண்டனர்.
பாதிக்கப்பட்டவர்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பண உரைகள், பலகாரங்கள், புத்தாடைகள் உள்ளிட்டவற்றை வழங்கினர்.
மேலும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான நிதி திரட்டும் நிகழ்வானது ‘ItsTrainingRaincoats’ ஆல் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வு மே 1 அன்று நிறைவடைந்தது.
இதன் மூலம் திரட்டப்படும் நிதியானது அவர்களுக்கு சமமாகப் பிரித்து வழங்கப்படும்.
தங்களது உயிரை பெரிதாக கருதாமல் மற்றவர்களின் உயிரை காப்பாற்ற போராடிய வெளிநாட்டு ஊழியர்களின் செயலை அனைவரும் பாராட்டினர்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சமூக உயிர்காக்கும் விருது வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.
FOLLOW US ON MORE :
Telegram id : https://t.me/sgnewsinfoo
Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL
Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==
