ப்ரோக்கோலியை முகத்தில் பயன்படுத்தினால் இவ்வளவு நன்மைகளா?

ப்ரோக்கோலியை முகத்தில் பயன்படுத்தினால் இவ்வளவு நன்மைகளா?

ப்ரோக்கோலி அழகாக இருக்கும் உங்களது சருமத்தை இன்னும் அழகாக மாற்றுவதற்கு இது உதவி செய்யும்.

குறிப்பாக வயதாகும் போது ஏற்படும் சரும சுருக்கங்களை நீக்கி இளமையாக வைத்திருக்கும்.

மேலும் நமது சருமத்தை பளபளப்பாகவும் கலராகவும் மாற்றும்.

இந்த ப்ரக்கோலியை எவ்வாறு சருமத்திற்கு பயன்படுத்தலாம் என்றும் அதன் பயன்கள் என்னென்ன என்பது குறித்தும் காணலாம்.

சருமத்திற்கு கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும்.

ப்ரோக்கோலி சருமத்திற்கு ஏராளமான நன்மைகளை செய்வதோடு அதில் மிக முக்கியமான கொலாஜன் உற்பத்தி உள்ளது.

ப்ரோக்கோலியில் உள்ள அதிகப்படியான விட்டமின் சி சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது.

இது சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவி செய்கிறது.

கொலாஜன் என்பது ஒரு புரத மூலக்கூறு ஆகும். இதுதான் சருமத்தின் தன்மை அமைப்பு மற்றும் நெகிழ்வுத் தன்மை ஆகியவற்றை தீர்மானிக்கிறது.

ப்ரோக்கோலியில் மிகவும் சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் இருக்கும்.

சரும செல்களை புதுப்பித்து செல்களில் ஏற்படும் சேதத்தை தடுக்கும்.

இதில் இருக்கும் ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகள் சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு ஏற்படும் சரும பிரச்சனைகளான எரிச்சல் அரிப்பு மற்றும் சருமம் சிவந்து இருத்தல் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.

சருமத்திற்கு ஏராளமான நன்மைகளை செய்யக்கூடியது தான் ப்ரோக்கோலி.

இது சூரிய கதிர்வீச்சில் இருந்து வெளிப்படும் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.

எப்படி பயன்படுத்தலாம்?

ப்ரோக்கோலியை ஆவியில் வேக வைத்து அது ஆறியபின் பேஸ்ட்டாக அரைத்து அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து பேஸ்மாஸ்க் போல முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.இது போன்று ஓரிரு முறை செய்தால் பளபளவென மாறுவதை உங்களால் பார்க்க முடியும்.

ப்ரோக்கோலியை நன்கு துருவி ஒரு கப் தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.அதன் பின் அந்த நீரை ஆறவிட்டு ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி அல்லது காட்டனில் நனைத்து டோனராக பயன்படுத்தலாம்.

ப்ரோக்கோலியில் இருந்து சிறிதளவு எடுத்து அதை சுத்தம் செய்து மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்து வேண்டும். அதன் பின் ஒரு பௌலில் மாற்றி கொஞ்சமாக யோகர்ட் சேர்த்து பேஸ்டாக கலக்க வேண்டும்.இதை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் மென்மையாக ஸ்கிரப் செய்ய வேண்டும். 15-20 நிமிடங்ங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.

ப்ரோக்கோலி எந்த அளவுக்கு டயட்டில் உள்ளவர்களுக்கு நன்மை அளிக்கிறதோ அதே அளவுக்கு சருமத்திற்கும் நன்மை அளிக்கிறது. உங்கள் சருமம் சென்சிடிவான சருமமாக இருந்தால் அதை பயன்படுத்துவதற்கு முன் பேட்ச் டெஸ்ட் செய்தபின் அப்ளை செய்யுங்கள்.