இஸ்தான்புல்லில் குலுங்கிய கட்டிடம்..!!! ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு..!!
துருக்கியின் இஸ்தான்புல்லில் 6.2 என்ற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கமானது நகரத்திலிருந்து தென்மேற்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மர்மரா கடலில் மையங் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் அண்டை நகரங்களில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
கட்டடங்களில் இருந்து கீழே குதித்த சுமார் 150 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் , யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை என்று மாநில ஆளுநர் கூறினார்.