குணாளன் மீதான வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதிமன்றம்..!!!

குணாளன் மீதான வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதிமன்றம்..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ‘நெருப்பு’ குணா என்று அழைக்கப்படும் ஒலி 968 இன் முன்னாள் படைப்பாளரான குணாளன் மோகனின் வழக்கு ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவரின் வழக்கு அடுத்த மாதம் 19 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்.

கடந்த மாதம் 21 ஆம் தேதி,43 வயதான குணாளன் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

16 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டதாகவும், இரண்டு பெண்களை தகாத முறையில் படம் பிடித்ததாகவும் அவர் சந்தேகிக்கப்படுகிறார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கும் 31 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் 16 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணுடன் குணாளன் பாலியல் உறவு கொண்டதாகக் கூறப்படுகிறது.

காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதை அறிந்ததும், அந்தப் பெண்ணுடனான உரையாடலை அவர் இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டதாக நம்பப்படுகிறது.

தனித்தனி சந்தர்ப்பங்களில் இரண்டு பெண்களின் பிறப்புறுப்புகளை அவர்களின் அனுமதியின்றி புகைப்படம் எடுத்ததாகவும் அவர் சந்தேகிக்கப்படுகிறார்.

குணாளன் இன்று (ஏப்ரல் 21) காலை நீதிமன்றத்தில் சுமார் 8.20 மணியளவில் வந்தார்.

குணாளன் அவரது சார்பில் வழக்கறிஞர் ஒருவரை ஏற்பாடு செய்திருந்தார்.

வழக்கறிஞர் வழக்கு தொடங்குவதற்கு முன்பு 4 வாரம் அவகாசம் கோரினார்.

நீதிமன்றம் அதை ஏற்றுக்கொண்டு வழக்கை ஒத்திவைத்தது.

குணாளன் மீது மொத்தம் 7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அவற்றில் நீதிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டும் அடங்கும்.

16 வயதுக்குட்பட்ட பெண்ணுடன் உடலுறவு கொண்ட குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

நீதிக்கு இடையூறு விளைவிக்கும் குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இந்தச் செய்தியை மீடியாகிராப் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.