சிங்கப்பூரில் கடந்த இரண்டு வாரங்களில் டெங்கு சம்பவங்கள் குறைவு!!

சிங்கப்பூரில் கடந்த இரண்டு வாரங்களில் டெங்கு சம்பவங்கள் குறைவு!!

சிங்கப்பூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு வாரங்களாக குறைந்துள்ளது.

கடந்த வாரம் 90க்கும் குறைவான சம்பவங்கள் பதிவானது. மொத்தம் 89 சம்பவங்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்கள் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பின் இணையதளம் கூறியது.

இது முந்தைய வாரத்தில் பதிவானதை விட 9 சம்பவங்கள் குறைவாகும்.

நேற்றைய நிலவரப்படி இந்த வருடத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 1325 ஆக இருந்தது.

இப்போது தீவு முழுவதும் 15 வட்டாரங்களில் டெங்கு காய்ச்சல் பரவுகிறது.

செம்பவாங் ஹில்ஸ் ரோடு,ஹவ்காங் அவன்யூ 1 ஆகிய இரண்டு வட்டாரங்களில் 10 டெங்கு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.