காயம் விளைவிக்கும் அளவுக்கு கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 60 வயதுடைய லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் குறித்த வீடியோவில் வாகனம் ஒன்று பெண் மீது மோதியதில் அந்த வாகனத்துக்கு அடியில் பெண் ஒருவர் கிட்டத்தட்ட சிக்கி இருப்பதையும் காணலாம்.
அந்த வீடியோ வெளியானதை அடுத்து அந்த லாரி ஓட்டுநரை காவல்துறை கைது செய்தது.
54 வயதுடைய அந்த பெண்ணை செங்காங் பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டது.அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது சுயநினைவுடன் இருந்ததாக காவல்துறை ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
இந்த விபத்து பொங்கோல் சென்ட்ரல் பிளாக் 166A அருகே நடந்தது.இது குறித்து ஏப்ரல் 17 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு தகவல் வந்ததாக காவல்துறை கூறியது.
காவல்துறை கைது செய்த லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகிறது.
ஒரு பெண் உட்பட கும்பல் ஒன்று லாரியை வழிமறித்து ஓட்டுநரை இறங்கச் சொல்லி வற்புறுத்தியபோது லாரி ஒரு பக்கமாக திரும்பியதால் அந்த பெண் கீழே விழுந்தார்.அதனை காட்டும் வீடியோவை SG road vigilante தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.