கடல்சார் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த Al தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் DSTA..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூர் அரசு கடல்சார் துறையில் அச்சுறுத்தல்கள் மற்றும் ஆபத்துகளை குறைக்க செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்த உள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட கடல்சார் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான விண்ட்வார்டுடன் சிங்கப்பூரின் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (DSTA) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
கப்பல் கட்டமைப்புகள் மீதான சைபர் தாக்குதல்கள் மற்றும் ட்ரோன்களின் பயன்பாடு அதிகரிப்பது போன்ற அச்சுறுத்தல்கள் கடல்சார் துறையைப் பாதிக்கின்றன.
சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி மற்றும் மாநாட்டில் இந்த கூட்டாண்மை அறிவிக்கப்பட்டது.
DSTAவின் குழு தொழில்நுட்ப அதிகாரி திரு. செங் ஹெங் ந்கோம்,கடல்சார் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்தவும்,கடல் தொடர்புப் பாதைகளைப் பாதுகாக்கவும் AI ஆராய்ச்சியை மேம்படுத்த முயல்வதாக கூறினார்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் கடல்சார் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் ஆராயப்படும்.
இதன் மூலம் DSTA பொறியாளர்கள் விண்ட்வார்டின் ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் திட்டங்களில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.