சிலாங்கூர் வீட்டில் தீ விபத்து…!!!தங்க நகைகள் பத்திரமாக மீட்பு…!!!

சிலாங்கூர் வீட்டில் தீ விபத்து...!!!தங்க நகைகள் பத்திரமாக மீட்பு...!!!

மலேசியாவின் சிலாங்கூரில் ஏற்பட்ட எரிவாய் குழாய் வெடிப்பில் சேதமடைந்த வீட்டிலிருந்த தங்க நகைகளை ஒரு பெண் பாதுகாப்பாக மீட்டுள்ளார்.

அவர் அந்த நகைகளில் இருந்த கறைகளை சுத்தம் செய்ய நகைக் கடைக்குச் சென்றார்.

அதைப் பற்றி கடைக்காரர் டிக்டாக்கில் பதிவிட்ட வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த பெண்ணின் நகைகள் ஒரு அலுமினியப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்ததால், சம்பவத்தின் போது அது உருகவில்லை என்று கடைக்காரர் கூறினார்.

அந்தப் பெண் நகைகளைத் தவிர,வீட்டிலிருந்து சில ரொக்க நோட்டுகளை மட்டுமே மீட்டெடுக்க முடிந்ததாக அவர் கூறினார்.

மேலும் சம்பவத்தன்று நகைகள் உருகி இருந்தாலும் கூட அந்தத் தங்கத்திற்கு மதிப்பு உள்ளது என்று கடைக்காரர் கூறியிருந்தார்.