புதுடெல்லி விமான நிலையத்தில் புழுதி புயலால் விமானச் சேவைகள் தாமதம்!!

புதுடெல்லி விமான நிலையத்தில் புழுதி புயலால் விமானச் சேவைகள் தாமதம்!!

இந்தியாவில் உள்ள புதுடெல்லி விமான நிலையத்தில் ஏப்ரல் 11 ஆம் தேதி (நேற்று) புழுதிப்புயலால் விமானப் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது.

இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் 50 க்கும் மேற்பட்ட உள்ளூர் விமானச் சேவைகள் தாமதமடைந்தது.7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் ,25 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன.இந்த தகவலை The Hindu செய்தி தெரிவித்தது.

புழுதி புயல் காரணமாக விமானத்தில் ஏறுவதற்கான நுழைவாயில்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Air India விமானத்தில் பயணிக்க வேண்டிய பயணிகள் இரவு முழுவதும் அங்கேயே தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

மொத்தம் 22 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன.இதனை Air India நிறுவனம் கூறியது. 5 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.