உங்கள் வீட்டில் மணி பிளான்ட் இருந்தால் இந்த தவறை மறந்தும் கூட செய்து விடாதீர்கள்…….

உங்கள் வீட்டில் மணி பிளான்ட் இருந்தால் இந்த தவறை மறந்தும் கூட செய்து விடாதீர்கள்.......

உங்கள் வீட்டில் மணி பிளாண்ட் இருந்தால் இந்த தவறை செய்யாதீர்கள்.

இன்று பலருக்கும் வீட்டின் அழகை மேம்படுத்துவதில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

அதற்காக வீட்டில் பல பொருள்களை வாங்கி வைத்து வீட்டின் அழகை மேலும் மேம்படுத்துகிறார்கள்.

அதில் மணி பிளான்ட்டும் ஒன்று. இந்த செடி வீட்டிற்கு ஒருவித அழகை கொடுப்பதோடு வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பை மேம்படுத்த உதவுகிறது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

வீட்டில் மணி பிளான்ட் வைத்தால் சில விதிகளை பின்பற்ற வேண்டியது அவசியமாம். இல்லை என்றால் வீட்டில் பணம் சேர்வதற்கு பதிலாக அதிக அளவு செலவு ஏற்படுமாம்.

குறிப்பாக வீட்டில் மணி பிளான்ட் தவறான இடத்தில் வைத்தால் அது ஒருவரை ஏழ்மையில் தள்ளி விடுவதோடு வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கச் செய்து கடன் சுமை, பண பிரச்சனை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

வாஸ்துபடி மணி பிளான்ட் செடியை வீட்டின் வடகிழக்கு திசையில் வைக்கக்கூடாது.

நற்பலன்கள் கிடைக்க வேண்டும் என்றால் மணி பிளான்ட் செடியை வீட்டின் தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும்.

வீட்டில் வைக்கும் மணி பிளான்ட் செடி காய்ந்த இலையுடன் இருக்கக் கூடாது.

காய்ந்த இலையுடன் மணி பிளான்ட் செடியை வைப்பது வீட்டிற்கு துரதிஷ்டத்தை கொண்டு வரும்.

அவ்வாறு காய்ந்த இலையுடன் மணி பிளான்ட் செடி இருந்தால் அதில் உள்ள இலைகளை எடுத்து விட வேண்டும் இல்லை என்றால் வேறு செடி வைப்பது நல்லது.

மணி பிளான்ட் செடியை வீட்டினுள் மேலிருந்து கீழாக தொங்கவிடக்கூடாது.


மாறாக அந்த கொடியை ஒரு குச்சி அல்லது நூலை கட்டி மேல் நோக்கி வளருமாறு வைக்க வேண்டும்.

மணி பிளான்ட் செடியை வீட்டிற்கு வெளியே எப்போதும் வைத்து வளர்க்கக்கூடாது.

அலங்காரத்திற்காக கூட வீட்டிற்கு வெளியே மணி பிளான்ட் செடியை வைக்காதீர்கள்.

எக்காரணம் கொண்டும் மணி பிளான்ட் செடியை பிளாஸ்டிக் பாட்டிலில் வைத்து வளர்க்கக்கூடாது.

அவைகளை கண்ணாடி பாட்டில் அல்லது மண் பாத்திரத்தில் தான் வைத்து வளர்க்க வேண்டும்.