தனுஷுக்கு வில்லனா நடிக்கவுள்ளவர் இவரா?

தனுஷுக்கு வில்லனா நடிக்கவுள்ளவர் இவரா?

தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குநர் என பல முகங்களை கொண்டவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ்.

தனுஷ் இயக்கத்தில் உருவான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் வெளிவந்து ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் அடுத்ததாக இட்லி கடை படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இயக்குநராக கலக்கி கொண்டிருந்த தனுஷ் அவர்கள் நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்தார்.

ஜூன் மாதம் 20 ஆம் தேதி தனுஷ் நடிப்பில் வெளிவர உள்ள படம் குபேரா திரைப்படம்.

இதற்கிடையில் பாலிவுட்டிலும் தேரே இஷ்க் மெயின் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜூ அவர்கள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

வேல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த திரைப்படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது.

இந்த படத்தில் பிரபல மலையாள நடிகரான ஜெயராம் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் நடிகர் அர்ஜுன் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.