உலகளவில் பிஸ்தா பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.அதற்கு காரணம் டிக்டாக் மூலம் பிரபலமான துபாய் சாக்லேட் எனக் கூறப்படுகிறது.
Fix Dessert Chcolatier நிறுவனம் 2021 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது.டிக்டாக்கில் Maria Vehera என்பவர் அந்த சாக்லேட்டை சாப்பிடும் வீடியோ பிரபலமானது.அதன் பின் அந்த சாக்லேட்டை ஒரு முறையாவது சுவைக்க வேண்டும் என்று பலரும் ஆசை பட்டனர்.
இதே போன்ற சாக்லேட்டை Lindt,Nestle ஆகிய நிறுவனங்களும் வெளியிட்டன.இதனால் பிஸ்தா பருப்புகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக Metro ஊடகம் கூறுகிறது.
பிஸ்தாவை உலகிலேயே அமெரிக்காவிற்கு பிறகு அடுத்து மிக அதிகமாக தயாரிக்கும் நாடு ஈரான்.
கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் கடந்த மாதம் (மார்ச் 2025) வரை ஈரான் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கு ஏற்றுமதி செய்த பிஸ்தாவின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக Metro கூறியது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு அமெரிக்காவின் பிஸ்தா விளைச்சல் குறைந்தது.
இதே போன்ற சாக்லேட்டை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களை Fix Dessert Chocolatier நிறுவனத்தின் முதலாளிகள் விமர்சித்தனர்.