அவசரமாக தரையிறக்கப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம்!! ஒரே வாரத்தில் இரண்டு சம்பவம்!!

அவசரமாக தரையிறக்கப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம்!! ஒரே வாரத்தில் இரண்டு சம்பவம்!!

இந்தோனேசியாவின் ஜக்கர்தாவிலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு பயணம் செய்த மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் நேற்று(மார்ச் 19) KLIA அனைத்துலக விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அந்த MH720 விமானம் மாலை 6:17 மணியளவில் பாதுகாப்பாக தரையிறக்கபட்டதாக மலேசிய சிவில் விமான போக்குவரத்துத்துறை அதிகாரி தெரிவித்தார்.

விமானம் உடனடியாக தரையிறங்குவதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் FMT செய்தியிடம் கூறினார்.

என்ன நடந்தது என்பது குறித்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த வாரத்தில் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் சம்மந்தப்பட்ட இரண்டாவது நிகழ்வு இது.

மார்ச் மாதம் 14ஆம் தேதி மணிலாவில் இருந்து கோலாலம்பூருக்கு பயணம் செய்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தின் இயந்திரத்தில் தீப்பிடித்ததால் அந்த விமானம் மீண்டும் நினோய் அக்கினோ விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

அந்த சம்பவத்தின் போது யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை