கடைகளுக்கு ரெய்டு விட்ட அதிகாரிகள்...!! சிக்கிய கடை உரிமையாளர்கள்...!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள சுமார் 300 வணிகங்கள் மற்றும் கடைகளில் கடந்த ஆண்டு சரிபார்க்கப்படாத அல்லது காலாவதியான எடைக் கருவிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இது 2023 ஐ காட்டிலும் அதிகம் என்று கூறப்படுகிறது.
இதுபோன்ற கருவிகள் தவறான எடையைக் காட்டுவதால் வாடிக்கையாளர்கள் நியாயமற்ற விலையில் பொருட்களை வாங்கும் அபாயம் உள்ளது.
பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு நியாயமான விலையை கொடுத்து வாங்குகின்றனர்.ஆனால் முறையான எடை காட்டப்படாத கருவிகளை பயன்படுத்தும் போது மக்கள் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.
இந்தப் பிரச்சனையை தவிர்ப்பதற்காக எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் எடைகள் மற்றும் அளவீடுகள் அலுவலகம் கருவிகள் சரியாக வேலை செய்கிறதா என்பதைக் கண்டறிய சோதனை நடத்தியது.
சரி பார்க்கப்பட்ட எடை கருவிகளின் மீது அடையாள ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.
இது ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும்.
ஒரு வருடத்திற்கு பின்பு கருவியை மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும்.
ஒட்டப்பட்ட ஸ்டிக்கரில் QR குறியீடு இருக்கும்.
சரிபார்க்கப்படாத அல்லது காலாவதியான எடை கருவிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு 5,000 வெள்ளி வரை அபராதம் அல்லது 3 மாதங்கள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.