புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணிய கோவிலில் பங்குனி உத்திர திருவிழா…!!! 11/04/2025 / murugan, panguni uththira thiruvizha, sgnesinfo, Singapore புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணிய கோவிலில் பங்குனி உத்திர திருவிழா...!!! சிங்கப்பூர்:ஈஷூனில் உள்ள புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது.இதனால் ஆலயத்தில் காலை முதலே பக்தர்கள் குவியத் தொடங்கினர்.கோவிலில் விழாவிற்கான ஏற்பாடுகளும் சிறப்பாக இருந்தது.இந்த ஆண்டு சுமார் 5000 பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதிகாலை 3 மணியில் இருந்தே பக்தர்கள் ஆலயத்திற்கு வர தொடங்கினர்.சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஏராளமான பக்தர்கள் பால்குடங்களை செலுத்தினர். உணவங்காடி மேஜைகளை ஆக்கிரமித்துக் கொண்டால் அபராதம் விதிக்கப்படுமா...??? முதல் காவடியும், முதல் பால்குடமும் அதிகாலை 3 25 மணிக்கு ஆலயத்திற்கு வந்தடைந்தது.காலை 7:20 மணியிலிருந்து தொடர்ச்சியான காவடிகள் ஆலயத்திற்கு வந்த வண்ணம் இருந்தன.ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.வெள்ளிக்கிழமை வேலை நாட்களிலும் கூட ஆலயத்தில் மக்கள் கூட்டம் திரளாக இருந்தது.மாலை வேளையில் மேலும் பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வானிலையைப் பொறுத்தவரை சற்று மேகத்துடன் காட்சியளிக்கிறது.இந்த தகவல் Mediacorp செய்தியில் வெளியிடப்பட்டது. FOLLOW US ON MORE :Telegram id : https://t.me/sgnewsinfooFacebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwLInstagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==