போப் பிரான்சிஸ் காலமானார்!! 21/04/2025 / RIP, Rome, sgnewsinfo, worldnews போப் பிரான்சிஸ் காலமானார்!! ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் தனது 88 வயதில் காலமானார்.அவர் இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.திங்கட்கிழமை காலை கார்டினல் கெவின் ஃபாரெல் அறிக்கை வெளியிட்டார்.காசா சண்ட்டா மார்ட்டாவில் உள்ள அவரது இல்லத்தில் அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.அவர் நிமோனியாவால் நுரையீரல்கள் மோசமாக பாதிக்கப்பட்டன.மருத்துவமனையில் இருந்து கடந்த மாதம் 23 ஆம் தேதி இல்லம் திரும்பினார். நிமோனியாவில் இருந்து மீண்டு வரும் போப்!! புனித வெள்ளி பிரார்த்தனையில் கலந்து கொள்ளவில்லை!! இந்த மாதம் தொடக்கத்தில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக வத்திகன் கூறியிருந்தது.அவரது உடல்நிலை குறித்து போப் பிரான்சிஸ் அறிக்கைகளையும் வெளியிட்டு வந்தார்.1936 ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவில் போப் பிரான்சிஸ் பிறந்தார்.2013 ஆம் ஆண்டு கத்தோலிக்க சமயத் தலைவராக பதவியேற்றார்.கடந்த 2024 ஆம் ஆண்டு சிங்கப்பூர் உட்பட ஆசிய பசிபிக் வட்டாரத்தில் உள்ள 4 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது . FOLLOW US ON MORE :Telegram id : https://t.me/sgnewsinfooFacebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwLInstagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==