நிமோனியாவில் இருந்து மீண்டு வரும் போப்!! புனித வெள்ளி பிரார்த்தனையில் கலந்து கொள்ளவில்லை!!

நிமோனியாவில் இருந்து மீண்டு வரும் போப்!! புனித வெள்ளி பிரார்த்தனையில் கலந்து கொள்ளவில்லை!!

நிமோனியா நோய் தொற்றிலிருந்து மீண்டு வரும் போப் பிரான்சிஸ் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் புனித வெள்ளி பிரார்த்தனையில் கலந்து கொள்ளவில்லை.

ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள் நேற்று நடந்த பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.

அந்த பிரார்த்தனை ரோமின் கொலசியத்தில் நடந்தது.அவர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் 2013 ஆம் ஆண்டிலிருந்து போப்பாக இருந்து வருகிறார்.மேலும் அவர் 5 வாரங்களாக நிமோனியாவுடன் போராடி வருகிறார்.

தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் படிப்படியாக நோயிலிருந்து மீண்டு வருகிறார்.

வார இறுதியில் நடைபெறும் ஈஸ்டர் பிரார்த்தனையில் போப் கலந்து கொள்வாரா என்பது குறித்து வத்திகன் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.