மியான்மர் நாட்டை உலுக்கிய நிலநடுக்கத்தால் கடும் சேதம் ஏற்பட்டது. அங்கு தேடல் மற்றும் மீட்பு பணிகளில் பங்கெடுப்பதற்காகவும் உதவுவதற்காகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையினர் அனுப்பப்பட்டனர். அவர்கள் இன்று நண்பகல் நாடு திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த மாதம் 28ஆம் தேதி மியான்மரில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தின் போது 3400க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும் நூற்றுக்கணக்கானோரை காணவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.
சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட 80 பேர் கொண்ட குழுவை மியான்மருக்கு அனுப்பப்பட்டனர்.
மியான்மர் தீயணைப்புத் துறையிடம் கடந்த இரண்டு நாட்களில் அவர்கள் அத்தியாவசிய பொருட்களை ஒப்படைத்தனர்.