கோவிட்-19 க்கு பிறகு கடும் சரிவை கண்டுள்ள அமெரிக்கப் பங்கு சந்தை!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள வரிகளை தொடர்ந்து அமெரிக்க பங்குச்சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் அமெரிக்க பங்கு சந்தையில் மிகவும் மோசமான சரிவு ஏற்பட்டது.இந்த சரிவு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கோவிட் 19 பரவலின் போது ஏற்பட்ட வீழ்ச்சிக்குப் பிறகு மோசமான சரிவை கண்டுள்ளது.
இந்த நிலை மேலும் தொடரும் என்று அஞ்சப்படுகிறது.
டிசம்பர் மாதத்தில் உச்சநிலையை தொட்ட Dow Jones குறியீடு இப்போது அதில் இருந்து குறைந்து பத்து சதவீதத்திற்கு மேலாக சரிந்துள்ளது.
அதேபோல டிசம்பர் மாதத்தில் உச்சம் தொட்ட NASDAQ குறியீடு அதிலிருந்து 20 சதவீதத்தை இழந்து விட்டது.