கிடு கிடுவென உயரும் தங்கத்தின் விலை!!

கிடு கிடுவென உயரும் தங்கத்தின் விலை!!

தங்கத்தின் விலை ஏப்ரல் மாதத்தில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது.ஏப்ரல் 22 ஆம் தேதியான இன்று சவரனுக்கு ரூ.2200 உயர்ந்துள்ளது.கிடு கிடுவென உயரும் தங்கத்தின் விலையை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தங்கத்தின் விலை குறையும் என்று பலரும் காத்திருந்தனர் .ஆனால் அப்படி ஆகாமல் தங்கத்தின் விலையானது கிடு கிடுவென உயர்கிறது.

2025 ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களில் மட்டும் தங்கத்தின் விலை 25 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது.ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.74000 மேல் உயர்ந்துள்ளது.

இன்னும் விலை உயர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 10000 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது .

22 காரட் தங்கத்தின் விலை :

ஆபரணம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.275 உயர்ந்து ரூ.9290 க்கு விற்பனையாகிறது.ஒரு பவுன் தங்கம் சவரனுக்கு ரூ.2200 உயர்ந்து ரூ.74320 க்கு விற்பனையாகிறது.

24 காரட் தங்கத்தின் விலை :

ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.10135க்கு விற்பனையாகிறது.8 கிராம் தங்கத்தின் விலை ரூ.81080 க்கு விற்பனை செய்யப்படுகிறது .

வெள்ளி விலை :

தங்கத்தின் விலை உயர்ந்தாலும் வெள்ளியின் விலையில் மாற்றம் இல்லாமல் இருக்கிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.111 ஆகவும் , ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.111000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.