ஹெர்மிட் ரக நண்டுகளை கடத்தியதாகஜப்பானைச் சேர்ந்த மூவர் கைது..!!!

ஹெர்மிட் ரக நண்டுகளை கடத்தியதாக ஜப்பானைச் சேர்ந்த மூவர் கைது..!!!

ஜப்பானில், சூட்கேஸ்களில் ஹெர்மிட் ரக நண்டுகளை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சூட்கேஸ்களில் இருந்து வரும் சத்தம் கேட்டதையடுத்து, ஹோட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இரண்டு பேருக்குச் சொந்தமான மூன்று பெட்டிகளில் சுமார் 95 கிலோகிராம் எடையுள்ள ஹெர்மிட் ரக நண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

அவற்றின் அறிவியல் மற்றும் கலாச்சார மதிப்பு காரணமாக அவை ஜப்பானின் தேசிய இயற்கை இனங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.

மூன்று பெட்டிகளில் 65 கிலோ ஹெர்மிட் நண்டுகளுடன் மற்றொரு நபர் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மூவரும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.அவர்களிடம் ஆயிரக்கணக்கான ஹெர்மிட் ரக நண்டுகள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஒரு ஹெர்மிட் நண்டு 20,000 யென் (சுமார் 180 வெள்ளி) வரை விற்கப்படலாம்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.