அமெரிக்காவில் அதிகரிக்கும் தட்டம்மை நோயால் மூவர் உயிரிழப்பு…!!!

அமெரிக்காவில் அதிகரிக்கும் தட்டம்மை நோயால் மூவர் உயிரிழப்பு...!!!

அமெரிக்காவில் ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக தட்டம்மை நோயாளிகளின் எண்ணிக்கை 1,000 ஐத் தாண்டியுள்ளது.

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டன.

குழந்தைகளை அதிகம் பாதிக்கும் இந்த நோய்க்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நோயால் குறிப்பாக டெக்சஸ் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு பதிவான தட்டம்மை நோயாளிகளின் எண்ணிக்கை 709 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இது நியூ மெக்ஸிகோ, ஓக்லஹோமா மற்றும் கன்சாஸ் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் பரவியுள்ளது.

இந்த ஆண்டு, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 13 சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தட்டம்மை தடுப்பூசி இரண்டு டோஸ்களுக்குப் பிறகு 97% செயல்திறன் கொண்டதாக இருப்பதாக CDC தெரிவித்துள்ளது

இதுவரை தட்டாமை நோயால் இரண்டு சிறுமிகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

மூவரும் தட்டம்மை தடுப்பூசி போடப்படவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.