ஆன்லைனில் வைரலாகும் வீடியோ!! தங்களது உயிரைக் கூட பொருட்படுத்தாமல் பச்சிளம் குழந்தைகளை பாதுகாத்த செவிலியர்கள்!!

ஆன்லைனில் வைரலாகும் வீடியோ!! தங்களது உயிரைக் கூட பொருட்படுத்தாமல் பச்சிளம் குழந்தைகளை பாதுகாத்த செவிலியர்கள்!!

சீனாவின் யுனான் வட்டாரத்தில் உள்ள மருத்துவமனையின் குழந்தைகள் வார்டு அதிர்வதை காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர்.

ஈரமான தரையில் பொருட்கள் சிதறி கிடந்ததும், குழந்தைகள் வைக்கப்பட்டிருந்த வண்டிகள் நகர்வதையும் அந்த காணொளியில் காண முடிகிறது.

அனைத்தும் குலுங்கினாலும் செவிலியர்கள் இருவர் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்கின்றனர்.

தரையில் விழுந்த ஒரு செவிலியர் குழந்தையை கட்டி அணைத்து கொள்கிறார்.

மற்றொரு செவிலியர் வண்டிகள் மோதிக் கொள்ளாமல் இருக்க அவற்றை பிடித்துக் கொண்டார்.

அந்த செவிலியர்களின் கடமை உணர்ச்சியை இணையவாசிகள் பாராட்டியுள்ளனர்.

நெருக்கடியில் எளிதில் பாதிக்கப்படுவோர்களை எந்த தயக்கமும் இல்லாமல் பாதுகாக்கும் அவர்களை பார்க்கும்போது மெய் சிலிர்க்கிறது,
என்றும் அந்த செவிலியர்கள் என்றுமே ஹீரோக்கள்தான் என்றும் அதேபோல மனிதாபிமானம் அனைத்து இடங்களிலும் உள்ளது என்றும் இணையவாசிகள் கருத்து தெரிவித்தனர்.

மியான்மரில் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. தாய்லாந்து, இந்தியா, வியட்நாம், சீனா ஆகிய நாடுகளிலும் அதிர்வுகள் உணரப்பட்டது.